search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூர் அணியுடன் இன்று மோதல் - பஞ்சாப் பதிலடி கொடுக்குமா?
    X

    பெங்களூர் அணியுடன் இன்று மோதல் - பஞ்சாப் பதிலடி கொடுக்குமா?

    விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. #IPL2019 #RCBvsKXIP

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் 42-வது ‘லீக்’ ஆட்டம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணிவெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும்.

    பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததால் பெங்களூர் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. அந்த அணி பஞ்சாப்பை மீண்டும் தோற்கடித்து 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பெங்களூர் அணியில் கேப்டன் விராட்கோலி (387 ரன்), டிவில்லியர்ஸ் (332 ரன்), பார்த்தீவ் படேல் (283 ரன்), மொய்ன் அலி (216 ரன்), யசுவேந்திர சாஹல் (14 விக்கெட்) ஸ்டெய்ன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ராஜஸ்தான் ராயல்சை 2 முறையும் (14 ரன், 12 ரன்) மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை ஒரு முறையும் வீழ்த்தியது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்), டெல்லி (5 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    பெங்களூர் அணியிடம் ஏற்கனவே தோற்றதற்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் பஞ்சாப் அணி இருக்கிறது.

    பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் (423 ரன்), லோகேஷ் ராகுல் (399 ரன்), அகர்வால் (227 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் முகமது ‌ஷமி (13 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (11 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #RCBvsKXIP

    Next Story
    ×