search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய துப்பாக்கி சுடுதலில் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது
    X

    ஆசிய துப்பாக்கி சுடுதலில் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி உலக சாதனையுடன் தங்கம் வென்றது. #AsianAirgunChampionship #ManuBhaker #SaurabhChaudhary
    புதுடெல்லி:

    12-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி 484.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.



    தென்கொரியாவின் ஹவாங் சியோன்குன்-கிம் மோஸ் ஜோடி 481.1 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், சீன தைபேயின் வு ஷியா யிங்-கு குயான் டிங் இணை 413.3 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர். மற்றொரு இந்திய ஜோடியான அனுராதா-அபிஷேக் வர்மா 372.1 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த போட்டியின் தகுதி சுற்றில் 17 வயதான மானு பாகெர், 16 வயதான சவுரப் சவுத்ரி ஜோடி 784 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் விடாலினா பாட்சாராஷ்கினா-அர்டெம் செர்னோசோவ் ஜோடி 782 புள்ளிகள் சேர்த்ததே உலக சாதனையாக இருந்தது. #AsianAirgunChampionship #ManuBhaker #-SaurabhChaudhary
    Next Story
    ×