என் மலர்
செய்திகள்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்
டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று அசத்தினார். #ISSFWorldCup #SourabhChoudhary
புதுடெல்லி:
சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
இதில், ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதன்மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். #ISSFWorldCup #SourabhChoudhary
Next Story






