search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை
    X

    20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா - நியூசிலாந்து நாளை பலப்பரீட்சை

    வெலிங்டனில் நாளை தொடங்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NZvIND
    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்தது.

    இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டனில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது.

    ஒருநாள் தொடரை போலவே 20 ஓவர் தொடரிலும் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி ஒருநாள் தொடரை வென்றது போல் ரோகித் சர்மா 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறார்.



    பேட்டிங்கில் தவான், தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா, டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோரும், பந்து வீச்சில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பந்த் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறார். அவரது அதிரடி ஆட்டம் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்-ரவுண்டர் வரிசையில் இருக்கும் ஹர்த்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.



    நியூசிலாந்து மண்ணில் இதுவரை இந்திய அணி 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது இல்லை. முதல் முறையாக வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 20 ஓவர் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    வில்லியம்சன், கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.



    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா : - ரோகித் சர்மா (கேப்டன்), தவான், ஷுப்மான் கில், டோனி, கேதர் ஜாதவ், ரிஷப் பந்த், விஜய் சங்கர், ஹர்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, குருணால் பாண்டியா.

    நியூசிலாந்து:- வில்லியம்சன் (கேப்டன்), கொலின் முன்ரோ, ராஸ் டெய்லர், ஜேம்ஸ் நீசம், டிம் செய்பெர்ட், சான்ட்னெர், சவுத்தி, கிராண்ட்ஹோம், சோதி, டிக்னெர், மிச்செல், ஸ்காட், பெர்குசன், பிரேஸ்வெல்.
    Next Story
    ×