search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2வது ஒருநாள் கிரிக்கெட்-  நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
    X

    2வது ஒருநாள் கிரிக்கெட்- நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 324 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தின் வெற்றிக்கு 325 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. #NZvIND
    நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்து, ரன் குவித்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது.

    அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், அம்பதி ராயுடு மற்றும் டோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்ததார். டோனி அரை சதத்தை நெருங்கினார். 

    50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் பந்துகளை பறக்கவிட்ட கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. #NZvIND
    Next Story
    ×