என் மலர்

  செய்திகள்

  சிட்னி போட்டிக்கான 13 இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு- அஸ்வின் உள்ளே, இஷாந்த் வெளியே
  X

  சிட்னி போட்டிக்கான 13 இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு- அஸ்வின் உள்ளே, இஷாந்த் வெளியே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிட்னியில் நாளை தொடங்க உள்ள 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான 13 வீரர்களின் பெயர் பட்டியலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. #AUSvIND #Ashwin
  மும்பை:

  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

  நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் 13 இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை, பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

  விராட் கோலி தலைமையிலான அணியில் ரஹானே, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

  இந்த பட்டியலில் இஷாந்த் சர்மா இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். சிட்னி டெஸ்டுக்கு அஸ்வின் உடற்தகுதி பெறவில்லை அணியின் செய்தித் தொடர்பாளர் அறிவித்த நிலையில், தற்போது 13 பேர் கொண்ட பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார். நாளை போட்டி தொடங்கும் போது, சூழலை பொறுத்து, களத்தில் விளையாடும் 11 பேரில் அஸ்வின் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. #AUSvIND #Ashwin
  Next Story
  ×