என் மலர்

  செய்திகள்

  புரோ கபடி லீக் - டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது
  X

  புரோ கபடி லீக் - டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புரோ கபடி லீக் போட்டியில் அரியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது. #ProKabaddi #JaipurPinkPanthers #DabangDelhi
  சண்டிகர்:

  12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

  அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 17 - 17  என சமனிலை வகித்தது.

  ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் டெல்லி அணியினர் சளைக்காமல் ஆடினாலும், ஜெய்ப்பூர் அணியினர் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்.

  இறுதியில், டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி 37 - 37 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் ஏ பிரிவில் தபாங் டெல்லி அணி 3வது இடத்தில் உள்ளது. #ProKabaddi #JaipurPinkPanthers #DabangDelhi
  Next Story
  ×