search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிம் பெய்ன் - விராட் கோலி ‘ஸ்லெட்ஜிங்’ எல்லையை மீறவில்லை: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் சொல்கிறார்
    X

    டிம் பெய்ன் - விராட் கோலி ‘ஸ்லெட்ஜிங்’ எல்லையை மீறவில்லை: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் சொல்கிறார்

    பெர்த் டெஸ்டில் டிம் பெய்ன் - விராட் கோலி இடையிலான வார்த்தை போர் எல்லையை மீறவில்லை என்று ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி - ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் ஆகியோர் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். போட்டி முடிந்தபின் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கும்போது விராட் கோலி டிம் பெய்னின் முகத்தை பார்க்கவில்லை.

    இதுகுறித்து விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இருவருக்குமிடையிலான வார்த்தை மோதல் (sledging) எல்லையை மீறவில்லை என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘வார்த்தைப்போர் மிகவும் அற்புதமானது என்று நான் நினைக்கிறேன். போட்டியில் இரண்டு நாட்டு கேப்டன்களும் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்த முயற்சி செய்தார்கள். அதில் குற்றமோ, உண்மையான ஆக்ரோசமோ இருந்ததாக நான் நினைக்கவில்லை.



    உண்மையிலேயே, அங்கு சற்று நகைச்சுவை இருந்தது. டெஸ்டில் போட்டியில் இதுபோன்ற வேடிக்கைகள் இருக்கத்தான் செய்யும். இது போட்டியின் சிறப்பான ஒரு பகுதி. எப்போதுமே ஆஸ்திரேலியா அணி விளையாடும்போது இதுபோன்ற நகைச்சுவைகள் இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×