என் மலர்

  செய்திகள்

  ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக தொடரை வெல்வதில்தான் கவனம்- இஷாந்த் சர்மா
  X

  ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக தொடரை வெல்வதில்தான் கவனம்- இஷாந்த் சர்மா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வெல்வதில்தான் முழுக்கவனம் இருக்கும் என இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். #AUSvIND
  இந்திய கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

  டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாத ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கபடுகிறது.

  நாங்களும் இதில்தான் முழுக்கவனம் செலுத்துவோம் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஷாந்த் சர்மா கூறுகையில் ‘‘தற்போது இருக்கும் முக்கிய சிந்தனை தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். ஒவ்வொருவரின் கவனமும் அதில்தான் உள்ளது.  நாங்கள் தனிப்பட்ட வீரர்களின் சிறந்த ஆட்டம் குறித்து யோசிக்கவில்லை. ஒரே இலக்கு தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். பயிற்சி ஆட்டம் தொடருக்கு சிறப்பான பயிற்சியாக இருக்கும். நீண்ட காலமாக இங்கு விளையாடும்போது சூழ்நிலை பற்றி நன்றாக தெரிந்திருக்கும்.

  சூழ்நிலையை நன்றாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. இதில் இன்னும் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும்.  எந்தவொரு வீரரும் நாட்டிற்காக விளையாட அணியில் தேர்வு செய்யப்பட்டால், அவர்கள் சிறந்த வீரர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஏன் நாட்டின் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எதையுமே நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.
  Next Story
  ×