என் மலர்

  செய்திகள்

  உலகக்கோப்பை, பொதுத்தேர்தல்- ஐபிஎல் தொடர் எப்போது?
  X

  உலகக்கோப்பை, பொதுத்தேர்தல்- ஐபிஎல் தொடர் எப்போது?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. #IPL2019
  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த ஆண்டு மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. பொதுவாக ஐபிஎல் சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி மே இறுதி வாக்கில் முடிவடையும். ஐபில் தொடர் முடிந்து 10 நாட்களுக்குள் உலகக்கோப்பை தொடர் தொடங்குகின்றன.

  உலகக்கோப்பை தொடருக்கு முன், இந்திய வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவை என்று இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட இந்திய அணியின் நிர்வாகிகள், பிசிசிஐ நிர்வாக குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.

  ஐதராபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின்போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு குறிப்பாக பும்ரா, புவனேஷ்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று விராட் கோலி நிர்வாக குழுவிடம் தெரிவித்து உள்ளார்.  மேலும் ஐபிஎல் போட்டிகளை தவற விடும் வீரர்களுக்கு பிசிசிஐ இழப்பீடு வழங்கலாம் எனவும் ஆலோசனை தரப்பட்டுள்ளது.

  இந்த முடிவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. கோலியின் இந்த கோரிக்கையால், மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக பாதிக்கப்படும். அந்த அணி பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரை இழக்க நேரிடும். மேலும் அடுத்த ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.  இப்பிரச்சனை தொடர்பாக சிஓஏ, ஐபிஎல் முதன்மை இயக்க மேலாளர் ஹேமங் அமினிடம் விவாதித்தனர். இதுகுறித்து முடிவெடுப்பதற்கு முன்பு அணிகளின் நிர்வாகங்களிடம் பேச வேண்டும். குறைந்தது வரும் நவம்பர் 15-ம் தேதி வீரர்கள் வாங்குதல், பரிமாற்றம் செய்வதற்கு கடைசி நாளுக்கு முன்பு ஆலோசிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

  மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 30-ம் தேதி வரை மட்டுமே வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் வீரர்கள் இல்லாவிடில் ஐபிஎல் தொடரின் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இதனால் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே மார்ச் 23-ந்தேதியில் ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×