என் மலர்

    செய்திகள்

    இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுக்க அற்புதமான இளம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்- நாதன் லயன்
    X

    இந்தியாவிற்கு அதிர்ச்சி கொடுக்க அற்புதமான இளம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்- நாதன் லயன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அற்புதமான இளம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர் என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்தியா ஆஸ்திரேலியா சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அதன்பின் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் போன்ற தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயனும் உள்ளனர்.



    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் களம் இறங்க முடியாக நிலையில் உள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் வலிமை இழந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் நாங்கள் கடும் சவாலை கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார். இந்திய தொடர் குறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘எங்களிடம் அற்புதமான இளம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடும் வகையில் சர்வதேச லெவல் கிரிக்கெட்டர்களை பெற்றுள்ளோம்’’ என்றார்.
    Next Story
    ×