என் மலர்

  செய்திகள்

  பந்தை சேதப்படுத்திய விவகாரம்- வார்னர், சுமித் மீதான தடை நீக்கம்?
  X

  பந்தை சேதப்படுத்திய விவகாரம்- வார்னர், சுமித் மீதான தடை நீக்கம்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வார்னர், சுமித் மீதான தடையை நீக்குவது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். #stevesmith #davidwarner
  மெல்போர்ன்:

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

  அப்போது பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய அணி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது டெலிவி‌ஷன் கேமராவில் தெளிவாக தெரிந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

  இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதாகவும், கேப்டன் ஸ்டீவ்சுமித் அதற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

  ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது. இதைத் தொடர்ந்து வார்னர், சுமித்துக்கு தலா 1 ஆண்டும், பேன்கிராப்ட்டுக்கு 9 மாதமும் தடை விதித்து நடவடிக்கை எடுத்தது.

  வீரர்கள் மீதான நடவடிக்கை கடுமையானது என்று விமர்சிக்கப்பட்டது. இதனால் தடையை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

  இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட சுயேச்சை குழுவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை சாடியிருந்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் டேவிட் பீவர், தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர் லேண்ட், இயக்குனர் மார்க் டெய்லர் ஆகியோர் தங்கள் பதவிகளை ஏற்கனவே ராஜினாமா செய்து இருந்தனர்.

  இதன் தொடர்ச்சியாக அணியின் செயல்திறன் தலைவர் ஹோவர்ட், ஒளிபரப்பு இயக்குனர் பென் அமர்பியோ ஆகியோரும் பதவி விலகினர்.

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக கெவின் ராபர்ட்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

  ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் மற்றும் வீரர்கள் சங்கம் தடையை நீக்க தொடர்ந்து வலியுறுத்தியது.

  இந்த நிலையில் வார்னர், சுமித் மீதான தடையை நீக்குவது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

  வார்னர், சுமித் மீதான தடையை நீக்க வீரர்கள் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. அது பரிசீலனை செய்யப்படும். வீரர்களின் உணர்வு மதிக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மோசமாக தோற்றது. இதனால் வார்னர், சுமித் ஆகியோரது பணி ஆஸ்திரேலியாவுக்கு தேவையாக இருக்கிறது.

  இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர்கள் மீதான தடை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்திய அணி வருகிற 21-ந் ளேததி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆஸ்திரேலியா சென்று மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. #stevesmith #davidwarner
  Next Story
  ×