என் மலர்

    செய்திகள்

    புரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தியது பெங்களூரு
    X

    புரோ கபடி லீக் - அரியானாவை வீழ்த்தியது பெங்களூரு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா அணியை 42- 34 என்ற கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. #ProKabaddi #BengaluruBulls #HaryanaSteelers
    12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ரெய்டுகளை எடுத்து வந்தனர். இதையடுத்து, சிறிது வித்தியாசத்தில் அரியானா அணியை விட பெங்களூரு அணி முன்னிலை வகித்து வந்தது.

    ஆட்டத்தின் இறுதியில் பெங்களூரு அணி சிறப்பாக செயல்பட்டதால், 42 -  34 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் பெங்களூரு அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

    மற்றொரு லீக் ஆட்டத்தில் யுபி யோதா மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் யுபி யோதா அணி 29-23 என்ற கணக்கில் புனேவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம் யுபி யோதா அணி 2வது வெற்றியை பதிவு செய்தது. #ProKabaddi #BengaluruBulls #HaryanaSteelers
    Next Story
    ×