search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கத்திற்கு காரணம் என்ன?
    X

    தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கத்திற்கு காரணம் என்ன?

    நிதாஹாஸ் இறுதிப் போட்டியில் சிக்சர் அடித்து ஹீரோவான தினேஷ் கார்த்திக் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #INDvWI
    இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

    அதன்பின் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்தார். இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் டி20 தொடரில் வங்காள தேசத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

    இதனால் இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்று புகழப்பட்டார். 13 ஒருநாள் போட்டியில் பங்கேற்று இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். கடைசியாக நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 33, 31 நாட்அவுட், 1 நாட்அவுட், 44, 37 ரன்கள் அடித்திருந்தார்.



    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    தினேஷ் கார்த்திக் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று தேர்வுக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி அனைவரையும் ஈர்க்கப்பட்டார். ஒருவேளை அவசர நிலை ஏற்பட்டால் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்படுவார். தினேஷ் கார்த்திக்கிற்கு நாங்கள் சில வாய்ப்புகள் கொடுத்தோம்’’ என்றார்.

    ரிஷப் பந்தின் மீது தேர்வுக்குழு அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் தினேஷ் கார்த்திக்கிற்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.
    Next Story
    ×