என் மலர்

  செய்திகள்

  விஜய் ஹசாரே- ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் அபார சதத்தால் மும்பை 400 ரன்கள் குவிப்பு
  X

  விஜய் ஹசாரே- ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யர் அபார சதத்தால் மும்பை 400 ரன்கள் குவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ப்ரித்வி ஷா, ஷ்ரேயாஸ் அய்யரின் சதங்களால் மும்பை 400 ரன்கள் குவித்தது. #VijayHazareTrophy
  பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூருவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் மும்பை - ரெயில்வேஸ் அணிகள் மோதி வருகின்றன.

  டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ப்ரித்வி ஷா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.  அடுத்து ப்ரித்வி ஷா உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். அந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 61 பந்தில் சதம் அடித்த ப்ரித்வி ஷா 81 பந்தில் 14 பவுண்டரி, 6 சிக்சருடன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

  ஷ்ரேயாஸ் அய்யர் 118 பந்தில் 8 பவுண்டரி, 10 சிக்சருடன் 144 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 55 பந்தில் 67 ரன்களும், லாட் 19 பந்தில் 30 ரன்களும் அடிக்க மும்பை அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்கள் குவித்தது.
  Next Story
  ×