search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 198 ரன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் - ஜடேஜா மகிழ்ச்சி
    X

    இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 198 ரன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் - ஜடேஜா மகிழ்ச்சி

    இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 198 ரன் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று ஜடேஜா கூறியுள்ளார். #ENGvIND

    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஹர்த்திக் பாண்ட்யா, அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக புதுமுக வீரர் ஹனுமா விஹாரி, ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தனது கடைசி டெஸ்டில் விளையாடும் தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான குக்குக்கு அனைத்து வீரர்களும் மரியாதை செய்தனர்.

    நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்து இருந்தது. குக் 71 ரன்னும், மொய்ன் அலி 50 ரன்னும் எடுத்தனர். பட்லர் 11 ரன்னும், ஆதில் ரஷீத் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், பும்ரா, ரவிந்திரஜடேஜா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன் என்ற வலுவான நிலையில் இருந்தது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 48 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது.

    நேற்றைய ஆட்டம் குறித்து ஜடேஜா கூறியதாவது:-

     



    எங்களது பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குக்கும், மொய்ன்அலியும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவுண்டரிகளை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது எங்களது திட்டமாக இருந்தது. 2-வது செசனில் நாங்கள் எந்த விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. ஆனால் ரன்களையும் வாரி கொடுக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

    ஆடுகளம் சமமான நிலையில் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. நேரம் செல்ல செல்ல ஆடுகளத்தில் லேசான மாற்றம் இருந்தது. இதை பயன்படுத்தி வேகப்பந்து வீர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 3 வேகப்பந்து வீரர்களும் அபாரமாக பந்து வீசினார்கள்.

    பந்துவீச்சில் என்னால் நேர்த்தியாக செயல்பட முடிந்தது. இதேபோல பேட்டிங்கிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் 4 டெஸ்டிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அஸ்வின் காயம் அடைந்ததால் 5-வது டெஸ்டில் வாய்ப்பை பெற்றார். அவர் ஜென்னிங்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார்.

    இதற்கிடையே இந்த டெஸ்டில் கருண்நாயரை சேர்க்காதது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    வீரர்கள் தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஆகாஷ் சோப்ரா, பத்ரிநாத், வர்ணனையாளர் ஹர்ஷா போகலே உள்ளிட் டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக கருண்நாயர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதுமுக வீரர் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. #ENGvIND

    Next Story
    ×