search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாய் ஜாலத்திற்குப் பதிலாக வீரர்களின் ‘பேட்’ பேச வேண்டும்- ரவி ஷாஸ்திரி மீது சேவாக் கடும் சாடல்
    X

    வாய் ஜாலத்திற்குப் பதிலாக வீரர்களின் ‘பேட்’ பேச வேண்டும்- ரவி ஷாஸ்திரி மீது சேவாக் கடும் சாடல்

    சிறந்த வெளிநாட்டு அணியாக இருக்கும் என்று வாய் ஜாலம் காட்டினால் மட்டும் போதாது, செயலில் காட்ட வேண்டும் என்று ரவி ஷாஸ்திரி மீது சேவாக் சாடியுள்ளார். #ENGvIND
    சவுத்தாம்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்குப்பின் முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரியை முன்னாள் வீரர் சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் முடிவில் இந்திய அணி ஒரு போட்டியிலும், இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும் வென்று 2-1 என்றகணக்கில் இருந்தன. இந்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 245 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.

    கடந்த 2011, 2014-ம் ஆண்டுகளில் இங்கிலாந்து வந்த இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்திருந்த நிலையில், இந்த முறை கோலி தலைமையில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, புஜாரா, ரகதனே ஆகிய 3 வீரர்களைத் தவிர எந்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேட் செய்யவில்லை. பந்துவீச்சாளர்கள் மட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்திய அணி, இங்கிலாந்து தொடருக்கு புறப்படும் முன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, உலகிலேயே எந்த நாட்டுக்குச் சென்றாலும் சிறப்பாக கிரிக்கெட் விளையாடக் கூடிய அணியாக இந்திய அணி திகழ்கிறது என்று தெரிவித்திருந்தார்.



    இதைக் குறிப்பிட்டு சேவாக் சாடியுள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘உலக அளவில் வெளிநாடுகளில் சென்று சிறப்பாக விளையாடக்கூடிய அணி இந்திய அணி என்று பயிற்சியாளர் ரவி ஷாஸ்திரி பேச்சில் மட்டும்தான் கூறுகிறார். ஆனால், பேச்சுக்கும் செயலுக்கும் தொடர்பில்லை. வெளிநாடுகளில் சிறப்பாகச் செயல்படும் அணிகள் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவன் மூலம் உருவாக்கப்படுகிறது.  ஓய்வறையில் அமர்ந்து கொண்டு பேசுவதால் உருவாக்கப்படுவதில்லை.

    ஒருவர் என்ன வேண்டுமானாலும், தனக்கு விருப்பமானவற்றையெல்லாம் பேசலாம். ஆனால் வீரர்களின் பேட் பேசவில்லை என்றால், ஒருபோதும் வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் அணியாக முடியாது’’ என்றார்.
    Next Story
    ×