என் மலர்

  செய்திகள்

  உலகின் சிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின்தான்- இங்கிலாந்து வீரர் சொல்கிறார்
  X

  உலகின் சிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின்தான்- இங்கிலாந்து வீரர் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின்தான் என்று இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். #Ashwin
  டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது இந்தியாவின் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இருவரும் ஆஃப்-ஸ்பின்னர்கள் ஆவார்கள். இருவரில் அஸ்வின்தான் சிறந்தவர் என்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்வான் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து ஸ்வான் கூறுகையில் ‘‘உலசின் தலைசிறந்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் என்பதை எளிதாக கூறிவிடலாம். ஆசியக் கண்டத்தில் அஸ்வின் ரெகார்டு அபாரமானது. எட்ஜ்பாஸ்டனில் அஸ்வின் வீசிய பந்து வீச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  நாதன் லயன் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக பந்து வீசிய போதிலும், இங்கிலாந்து மண்ணில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முடியவில்லை. அவரை விட அஸ்வின் சிறந்தவர், ஏனென்றால் அஸ்வின் மாறுபட்ட (variations) முறையில் பந்துகளை வீசுகிறார். மேலும், தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.
  Next Story
  ×