search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புவனேஸ்வர் குமார் உடற்தகுதி பெற்றார்- இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடுகிறார்
    X

    புவனேஸ்வர் குமார் உடற்தகுதி பெற்றார்- இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாடுகிறார்

    முதுகு வலியால் பாதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் உடற்தகுதி பெற்று விட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. #Bhuvi #BCCI
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார். இவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இயலவில்லை.

    கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பெறவில்லை. காயம் அடைந்த புவனேஸ்வர் குமார் இந்தியா திரும்பி, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயம் குணமடைவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் புவனேஸ்வர் குமார் உடற்தகுதி அடைந்து விட்டார் என்று பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் நான்கு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்து விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். இந்தியா ‘ஏ’ அணியில் சிறப்பாக பந்து வீசினால், ஐந்தாவது டெஸ்டில் விளையாட வாய்ப்புள்ளது.



    இந்தியா ‘ஏ’ அணி அடுத்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியை 29-ந்தேதி எதிர்கொள்கிறது. இதனால் புவனேஸ்வர் 30-ந்தேதி தொடங்கும் 4-வது டெஸ்டில் பங்கேற்க முடியாது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் செப்டம்பர் 7-ந்தேதி லண்டன் கியா ஓவலில் நடக்கிறது.
    Next Story
    ×