என் மலர்

  செய்திகள்

  ஸ்குவாஷ்- தீபிகா பல்லிகல் காலிறுதிக்கு முன்னேற்றம்
  X

  ஸ்குவாஷ்- தீபிகா பல்லிகல் காலிறுதிக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #AsianGames2018
  இந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிகல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தோனேசியாவின் யெனி சிட்டி ரோமாவை எதிர்கொண்டார். இதில் தீபிகா பல்லிகல் 3-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் வெற்றி பெற்றால் பதக்கத்தை உறுதி செய்து விடுவார்.

  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய பெண்கள் கூடைப்பந்து அணி 66-69 என இந்தோனேசியாவிடம் தோல்வியடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது.

  பெண்கள் கைப்பந்து போட்டியில் இந்திய அணி கஜகஸ்தானிடம் வீழ்ந்தது. 200 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் நீச்சலில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 6-வது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். கலப்பு இரட்டையர் பேட்மிண்டனில் இந்திய ஜோடி தோல்வியை தழுவியது.
  Next Story
  ×