என் மலர்

    செய்திகள்

    வுஷு போட்டியில் இந்தியாவிற்கு மூன்று வெண்கல பதக்கம்
    X

    வுஷு போட்டியில் இந்தியாவிற்கு மூன்று வெண்கல பதக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆசிய விளையாட்டு போட்டியின் வுஷு போட்டியில் இந்தியாவிற்கு ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் மூன்று வெண்கல பதக்கம் கிடைத்தது. #AsinGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. வுஷு போட்டியில் ஆண்களுக்கான சண்டா 56 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் சந்தோஷ் குமார் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிக்கு முன்னேறினாலே பதக்கம் உறுதி என்பதால் ஏற்கனவே பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் சந்தோஷ் குமார் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த டிரவுங் ஜியாங் புய்-ஐ எதிர்கொண்டார். இதில் 0-2 என சந்தோஷ் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.



    பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி சீனாவின் யிங்யிங் காய்-ஐ எதிர்கொண்டார். இதில் ரோஷிபினா தேவி 0-1 எனத் தோல்வியடைந்தார். இதனால் இவரும் வெண்கல பதக்கம் வென்றார்.

    இதேபோல் ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவில் சூர்ய பானு பார்ட்டப் வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவிற்கு மூன்று வெண்கல பதக்கம் கிடைத்தது.
    Next Story
    ×