search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலிப் பகுதியில் கேட்ச் பிடிப்பதில் கவனம் தேவை - அசாருதீன்
    X

    சிலிப் பகுதியில் கேட்ச் பிடிப்பதில் கவனம் தேவை - அசாருதீன்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர்கள் சிலிப் பகுதியில் கேட்ச்சுகளை தவறவிட்டனர். இதுகுறித்து இந்திய முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியதாவது:- #ENGvIND
    சிலிப் பகுதி என்பது முக்கியமான இடமாகும். அங்கு நிற்கும் வீரர்களை பயிற்சியின்போது கண்டறிய வேண்டும். நீண்ட நேரம் பயிற்சி செய்து 50 முதல் 60 கேட்ச் வரை பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    அதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்டறிந்து சிலிப் பகுதியில் நிறுத்த வேண்டும். அந்த பகுதியில் நிற்கும் வீரர்கள் தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு வைத்திருக்க வேண்டும். சில சமயம் பந்து மிகவும் தாழ்ந்து வரும் அதுபோன்ற நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும். பந்து தலைக்குமேல் செல்லும் போது பாய்ந்து பிடிக்க வேண்டும். இதற்கு நன்கு பயிற்சி செய்ய வேண்டும்.

    அதேபோல் சுழற்பந்து வீச்சின்போது சிலிப் பகுதியில் நிற்கும் வீரர் பந்தை கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும்.


    3-வது வீரராக களம் இறங்கும் புஜாரா இங்கிலாந்துக்கு முன்பாகவே வந்து கவுன்டி போட்டியில் விளையாடினார். ஆனால் அதில் ரன்களை குவிக்கவில்லை. வெளிநாட்டில் விளையாட புஜாரா திணறி வருகிறார். ஆனால் லோகேஷ் ராகுல் வெளிநாட்டு மைதானத்தில் சிறப்பாக விளையாடுகிறார்.

    லோகேஷ் ராகுல் தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் அணியில் நீண்ட காலம் விளையாடுவார். அணியில் நிரந்திரமாக இடம் பெற அவருக்கு அருமையான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. #ENGvIND #1000thTest #Azharuddin
    Next Story
    ×