என் மலர்

  செய்திகள்

  டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வீரன்ஸ் மோதல்
  X

  டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - காஞ்சி வீரன்ஸ் மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நத்தத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #ChepaukSuperGillies #KanchiVeerans
  நத்தம்:

  3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), நெல்லை, சென்னை ஆகிய 3 ஊர்களில் நடக்கிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

  இந்த தொடரின் 21-வது ஆட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் வி.பி.காஞ்சி வீரன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன.  இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறது. எனினும், முதல் வெற்றியை பதிவு செய்யவில்லை. எனவே, அந்த அணியினர் முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளனர். அந்த அணியின் கேப்டன் கோபிநாத், சசிதேவ், கார்த்திக், எம்.அஸ்வின் நன்றாக ஆடி வருவதால், மற்ற வீரர்களும் திறமையை நிரூபித்தால் வெற்றி பெறலாம்.

  மேலும், நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம் சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு ராசியான மைதானம் என்ற கருத்து டி.என்.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களிடையே உள்ளது. அந்த நம்பிக்கையோடும், முதல் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்தோடும் அவர்கள் களம் இறங்குவார்கள். அதேநேரம் தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்தாலும், 5-வது ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியுடன் காஞ்சி வீரன்ஸ் அணியினர் உற்சாகத்தில் உள்ளனர். அந்த உற்சாகத்தோடு 6-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

  இது அந்த அணிக்கு பலமாகும். மேலும் கேப்டன் அபராஜித், விஷால்வைத்யா, மோகித் போன்றோர் சவால் அளிக்க கூடியவர்கள். எனவே, 2 அணியினரும் திறமையை நிரூபித்து காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதற்காக 2 அணியின் வீரர்களும் நத்தத்தில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இன்றைய ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.   #TNPL2018 #ChepaukSuperGillies #KanchiVeerans 
  Next Story
  ×