search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4-வது இன்னிங்சில் அதிகமுறை ஐந்து விக்கெட்- தொட முடியாத உச்சத்தில் ஹெராத்
    X

    4-வது இன்னிங்சில் அதிகமுறை ஐந்து விக்கெட்- தொட முடியாத உச்சத்தில் ஹெராத்

    இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் டெஸ்டின் நான்காவது இன்னிங்சில் 12 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி உச்சத்தில் உள்ளார். #SLvSA #Herath
    இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பில் கடந்த 20-ந்தேதி முதல் நேற்று (23-ந்தேதி) வரை நடைபெற்றது. நான்கு நாட்களிலேயே முடிந்த இந்த டெஸ்டில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    490 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 113 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை பந்து வீச்சாளர்களை விரக்தியடையச் செய்தது. 4-வது நாள் காலை முழுவதும் நிலைத்து நின்று விளையாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் ஹெராத் இந்த ஜோடியை பிரித்தார். பவுமா 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 123 ரன்கள் குவித்தது.

    பவுமா விக்கெட் வீழந்ததும் டி காக் 8, ஸ்டெயின் 6, ப்ரூயின் (101) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார். அத்துடன் 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இவரது சிறப்பான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா 290 ரன்னில் சுருண்டது.



    இந்த போட்டியின் கடைசி இன்னிங்ஸ்-ஆன 4-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹெராத் 34 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 12 முறை நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி எந்த பந்து வீச்சாளரும் எட்ட முடியாத உச்சத்தில் உள்ளார்.

    சுழற்பந்து ஜாம்பவான்களான முரளீதரன் மற்றும் வார்னே ஆகியோர் தலா 7 முறைதான் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 6 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    Next Story
    ×