search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒருநாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு
    X

    ஒருநாள் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு

    ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். #ViratKohli
    துபாய்:

    ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்ற இங்கிலாந்து அணி (127 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி (121 புள்ளிகள்) 2-வது இடத்தில் தொடருகிறது. தென்ஆப்பிரிக்கா (113 புள்ளிகள்) 3-வது இடமும், நியூசிலாந்து (112 புள்ளிகள்) 4-வது இடமும், பாகிஸ்தான் (103 புள்ளிகள்) 5-வது இடமும், ஆஸ்திரேலியா (100 புள்ளிகள்) 6-வது இடமும், வங்காளதேசம் (93 புள்ளிகள்) 7-வது இடமும் வகிக்கின்றன.

    பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (911 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் 2 சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோரூட் (818 புள்ளிகள்) 4 இடம் முன்னேறி முதல்முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளார். பாபர் அசாம் (பாகிஸ்தான்), ரோகித் சர்மா (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) ஆகியோர் ஒரு இடம் சரிந்து முறையே 3 முதல் 6 இடங்களை பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஷிகர் தவான் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (775 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (763 புள்ளிகள்) 2-வது இடமும், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி (750 புள்ளிகள்) 3-வது இடமும், நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (699 புள்ளிகள்) 4-வது இடமும், ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (696 புள்ளிகள்) 5-வது இடமும் வகிக்கின்றனர். இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் (684 புள்ளிகள்) 6-வது இடத்தையும், யுஸ்வேந்திர சாஹல் (666 புள்ளிகள்) 10-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆல்-ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (360 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். #ViratKohli
    Next Story
    ×