என் மலர்

  செய்திகள்

  டிஎன்பிஎல்- திண்டுக்கல்லுக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்
  X

  டிஎன்பிஎல்- திண்டுக்கல்லுக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணிக்கு மதுரை பாந்தர்ஸ் 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #TNPL #SMPvDD
  தழிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று 2-வது ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கேதிராக சீசெம் மதுரை பாந்தர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

  அதன்படி மதுரை அணியின் அருண் கார்த்திக், ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் 16 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தலைவன் சற்குணம் 26 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் அருண் கார்த்திக் 44 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.  ஷிஜித் சந்திரன் 20 பந்தில் 35 ரன்கள் சேர்க்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. திண்டுக்கல் அணியில் அஸ்வின் 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
  Next Story
  ×