search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு- ஹெராத் திட்டம்
    X

    இங்கிலாந்து தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு- ஹெராத் திட்டம்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஹெராத் அறிவித்துள்ளார். #SLvSA
    இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தற்போதைய முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருப்பவர் ரங்கணா ஹெராத். 40 வயதாகும் இவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999-ம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணியில் அறிமுகமான இவர், முரளீதரனால் அதிக போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை.

    முரளீதரன் ஓய்வு பெற்றதும் இலங்கை அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். 71 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹெராத் 2015-ல் ஒருநாள் போட்டியிலும் இருந்தும், 2016-ல் டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இலங்கை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன்பின் நவம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகளில் விளையாடுகிறது. அத்துடன் சர்வதேச போட்டிகளை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.



    இதுகுறித்து ரங்கணா ஹெராத் கூறுகையில் ‘‘இந்த வருட இறுதியில் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் என்னுடைய கடைசி தொடராக இருக்கலாம். நாளை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் இங்கிலாந்து தொடருக்கு சுமார் மூன்று மாதங்கள் இருக்கிறது. தற்போது நான் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறேன்.

    கிரிக்கெட்டிற்கு வரும் ஒவ்வொரு வீரரும் அவர்களது ஆட்டத்தை நிறுத்தியாக வேண்டியதற்கான நேரம் வரும். அதற்கான நேரம் எனக்கு வந்து விட்டதாக கருதுகிறேன்’’ என்றார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெராத் டெஸ்ட் போட்டியில் 418 விக்கெட்டுக்கள் குவித்துள்ளார்.
    Next Story
    ×