என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டெஸ்ட் -  வங்காள தேசத்தை முதல் இன்னிங்சில் 43 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்
    X

    முதல் டெஸ்ட் - வங்காள தேசத்தை முதல் இன்னிங்சில் 43 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 43 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது. #WIvBAN #TestSeries
    ஆண்டிகுவா:

    வங்காள தேசம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் ஆண்டிகுவா நகரில் இன்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    வங்காள தேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம்  இக்பால், லியான் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். வெஸ்ட் இன்டீஸ் அணியினரின் பந்து வீச்சில் அனல் பறந்தது.

    குறிப்பாக, கீமர் ரோச் சிறப்பாக பந்து வீசி வங்காள தேசத்தின் முன்னணி வீரர்களை அவுட்டாக்கினார். தொடக்க ஆட்டக்காரரான லியான் தாஸ் மட்டும் இரட்டை இலக்கத்தை தொட்டார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே வெளியேறினர்.



    இதனால் வங்காள தேச அணி தனது முதல் இன்னிங்சில் 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இன்டீஸ் அணியின் கீமர் ரோச் 8 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. #WIvBAN #TestSeries
    Next Story
    ×