என் மலர்

  செய்திகள்

  உலக கோப்பை கால்பந்து - நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்
  X

  உலக கோப்பை கால்பந்து - நாக் அவுட் சுற்றில் அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. #WorldCup2018 #ARGFRA #ArgentinavsFrance
  ரஷியாவில் நடந்து வரும் 2-வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் லீக் ஆட்டங்கள் கடந்த 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 2-வது சுற்றுக்கு உருகுவே, ரஷியா (‘ஏ’ பிரிவு), ஸ்பெயின், போர்ச்சுக்கல் (பி), பிரான்ஸ், டென்மார்க் (சி), குரோஷியா, அர்ஜென்டினா (டி), பிரேசில், சுவிட்சர்லாந்து (இ), சுவீடன், மெக்சிகோ (எப்), பெல்ஜியம், இங்கிலாந்து (ஜி), கொலம்பியா, ஐப்பான் (எச்) ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

  இதற்கிடையே, 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று இரவு தொடங்கின. இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் மற்றும் ’டி’ பிரிவில் 2-ம் இடம் பிடித்த அர்ஜென்டினா அணிகள் மோதின.  ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிரான்ஸ் அணியின் அண்டோனி கிரிஸ்மான் 13வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். 

  இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அர்ஜெண்டினா அணியின் ஏஞ்சல் டி மரியா 41வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து நாக் அவுட் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்சும் அர்ஜெண்டினாவும் 1-1 என்ற கணக்கில் சமனிலை வகித்தது.  ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் காப்ரிய்ல் மர்கோடா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

  இதைத்தொடர்ந்து பிரான்ஸ் அணியின் பெஞ்சமின் பவார்ட் 57-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். அவரை தொடர்ந்து பிரான்ஸ் அணியின் மபாப்பி 64 மற்றும் 68-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

  கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் அர்ஜெண்டினா வீரர் செர்ஜியோ அகுரோ ஒரு கோல் அடித்தார்.
    


  இதையடுத்து, பிரான்ஸ் அணி அர்ஜெண்டினாவை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது. லியோன் மெஸ்சியின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. #ARGFRA #WorldCup #ArgentinavsFrance #LionelMessi #Football #WorldCupRussia2018 #FifaWorldCup18 #FIFA 
  Next Story
  ×