search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப், சாஹலை எப்படி சமாளிப்பது என யோசிக்க வேண்டியுள்ளது- அயர்லாந்து கேப்டன்
    X

    குல்தீப், சாஹலை எப்படி சமாளிப்பது என யோசிக்க வேண்டியுள்ளது- அயர்லாந்து கேப்டன்

    குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்து வீச்சை எப்படி சமாளிப்பது என யோசிக்க வேண்டியுள்ளது என்று அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் தெரிவித்துள்ளார். #IREvIND
    இந்தியா - அயர்லாந்து இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா (97), தவான் (74) ரன்கள் ஆகியோரின் அதிரடியால் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய அயர்லாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சாளர்களில் சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் 8 ஓவரில் 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பறினார்கள்.

    இந்நிலையில் இந்த இருவரையும் எப்படி சமாளிப்பது என்பதுதான் எங்களுக்கு முக்கிய வேலை என்று அயர்லாந்து கேப்டன் கூறியுள்ளார்.



    மேலும் இதுகுறித்து அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன் கூறுகையில் ‘‘நாங்கள் வீரர்கள் அறையில் உட்கார்ந்து குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்து வீச்சை 2-வது ஆட்டத்தில் எப்படி சமாளிப்பது என்பது குறித்து யோசிப்பது தேவையானது.

    இந்தியா உலகத்தரம் வாய்ந்த அணி. இரண்டு முன்னணி பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய தொடக்கத்தை கொடுத்தார்கள். சுழற்பந்து வீச்சு 2-வது இன்னிங்சில் இந்த அளவிற்கு வேலை செய்யும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் சுழற்பந்து வீச்சை அதிக அளவில் பயன்படுத்திருக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×