என் மலர்

  செய்திகள்

  50 வயது வரை என்னால் விளையாட முடியும் - ஜோகோவிச் சொல்கிறார்
  X

  50 வயது வரை என்னால் விளையாட முடியும் - ஜோகோவிச் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் 800 வெற்றிகளை பதிவுசெய்துள்ள செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச், தன்னால் 50 வயது வரை கூட விளையாட முடியும் என கூறியுள்ளார். #QueensClubChampionships #NovakDjokovic #Djokovic800

  லண்டன்:

  லண்டனில் குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் - பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோ ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர்.

  இந்த போட்டியின் முதல் செட்டை ஜோகோவிச், 7-5 என போராடி கைப்பற்றினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் இரண்டாவது செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜோகோவிச் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொள்கிறார்.

  நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டென்னிஸ் தொடர் போட்டிகளில் 800 வெற்றிகளை ஜோகோவிச் பதிவு செய்தார். இந்த சாதனையை எட்டிய 10-வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார். இந்த வெற்றிக்கு பின் ஜோகோவிச் பேட்டியளித்தார்.


  பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டி

  அப்போது, உங்களால் எத்தனை வயது வரை விளையாட முடியும் என அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 40 என யார் சொன்னது? நான் 50 என்றேன். எனவே இன்னும் 19 ஆண்டுகள் மீதமுள்ளது. நான் இரண்டு மடங்கு வெற்றிகள் பெற நிறைய நேரம் இருக்கிறது. 50, 60, 70. எவ்வளவு என தெரியவில்லை. அதற்கு எந்த வரம்பையும், எந்த எண்ணையும் நிர்ணயிக்க விரும்பவில்லை. 

  எனக்கு விளையாட வேண்டும் எனும் எண்ணம் இருக்கும் வரை நான் விளையாடுவேன். இந்த விளையாட்டை நான் உண்மையாகவே அனுபவித்து விளையாடுகிறேன், எனவே இன்னும் நிறைய நேரம் இருக்கும் என நம்புகிறேன். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், மேலும் அதில் வெற்றி பெற முடிகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது.

  நான் காயம் அடைந்த போதும், அறுவை சிகிச்சையின் போது எல்லாவற்றையும் நினைத்து, எனக்குள் நானே கேள்வி கேட்டு கொண்டிருந்தேன். ஆனால் எல்லோருக்கும் அந்த தருணங்கள் வரும் என்பது உங்களுக்கு தெரியும். எல்லோருக்கும் சந்தேகமான தருணங்கள் உள்ளன. அது தான் வாழ்க்கை. வாழ்க்கை வரும் சுழற்சிகள், உங்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுக்கிறது. நீங்கள் அவற்றில் இருந்து கற்றுக் கொள்கிறீர்களா, இல்லையா என்பது உங்களை பொருந்தே இருக்கிறது.

  நான் சொன்னது போல, எவ்வளவு காலம் எடுக்கும், என்று முடியும் என்பதை நான் நிர்ணயிக்க விரும்பவில்லை. எனக்கு 31 வயதாகிறது, இருப்பினும் உண்மையில் நான் 19 வயது போல் உணர்கிறேன். நான் தொடர்ந்து போக விரும்புகிறேன், அதை என்னை எங்கு கொண்டுசெல்கிறது என்பதையும் காண விரும்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #QueensClubChampionships #NovakDjokovic #Djokovic800
  Next Story
  ×