search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகந்தர் ரசா
    X
    சிகந்தர் ரசா

    முத்தரப்பு டி20 தொடர்- ஜிம்பாப்வே அணியில் முன்னணி வீரர்களுக்கு இடமில்லை

    ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உடனான முத்தரப்பு டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணியில் ரசா, டெய்லர் இடம்பெறவில்லை. #ZIMvAUS #ZIMvPAK
    ஜிம்பாப்வேயில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஜூலை 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வீரர்களான சிகந்தர் ரசா, பிராண்டன் டெய்லர், முன்னாள் கேப்டன் கிரேம் கிரிமர், வில்லியம்ஸ், கிரேக் எர்வின் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.


    பிராண்டன் டெய்லர்

    கடந்த 2016-ம் ஆண்டிற்குப் பிறகு அணியில் விளையாடாமல் இருந்த சிகும்புரா, ஹாமில்டன் மசகட்சா ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதற்கிடையே, சம்பளம் பாக்கி தொடர்பாக ஜிம்பாப்வே வீரர்கள், பயிற்சி முகாமை நிராகித்து வந்தனர். இதனால் தொடர் நடக்குமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×