search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரரை நிராகரிப்பது சரியா? யோ-யோ டெஸ்டுக்கு எதிராக குரல்கள்
    X

    ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரரை நிராகரிப்பது சரியா? யோ-யோ டெஸ்டுக்கு எதிராக குரல்கள்

    இந்திய அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாய விதிமுறைக்கு எதிராக குரல்கள் தற்போது வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. #YoYoTest

    இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை அணில் கும்ளே பயிற்சியாளராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இந்த முறை இருந்த போது, உடல்தகுதி வீரர்களுக்கு மிகவும் முக்கியமாக கருதப்பட்டு இந்த முறையை இந்தியாவிலும் அவர் அறிமுகம் செய்தார்.

    இந்தியாவில் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற 16.1 மதிப்பெண் எடுத்தாகவேண்டும். ஒவ்வொரு அணிக்கேற்ப இந்த மதிப்பெண் மாறுபடுகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்தாண்டு நடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட அம்பாத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அணிக்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் இந்திய அணியில் இடம் பெறாமல் போவதற்கு இந்த யோ-யோ டெஸ்ட் காரணமாகிறது என்றால், இது ஒருதலைப்பட்சமானது என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஷ்ரேயாஸ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் யோ-யோ டெஸ்டில் 19 மதிப்பெண் பெற்றால் மட்டுமே வீரர்களை அணிக்கு தேர்வு செய்கின்றனர். தென்னாப்பிரிக்க அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மதிப்பெண் இலக்காக உள்ளது. முன்னணி அணியாக உள்ள ஆஸ்திரேலியா 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த யோ-யோ டெஸ்டை தூக்கி விட்டு வேறு மாதிரியான சோதனையை .வழங்கிறது. 
    Next Story
    ×