என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
100 கிலோ பிறந்த நாள் கேக் உடன் சாலா முகத்தில் சிரிப்பை வரவழைத்த ரசிகர்கள்
Byமாலை மலர்17 Jun 2018 12:28 PM GMT (Updated: 17 Jun 2018 12:28 PM GMT)
100 கிலோ எடைகொண்ட பிறந்த நாள் கேக்கை தயார் செய்து முகமது சாலா முகத்தில் ரசிகர்கள் சிரிப்பை வரவழைத்து உற்சாக மூட்டினார்கள். #MohamedSalah
உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் எகிப்து அணி சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட தகுதிப் பெற்றுள்ளது. அதற்கு அந்த அணியின் முகமது சாலாதான் முக்கிய காரணம். அப்படிபட்டவர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உருகுவே அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை.
அன்று (15-ந்தேதி) சாலாவிற்கு பிறந்தநாள். ஆனால் வீரர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சோகமான முகத்துடனே இருந்து வந்தார். உருகுவே அணிக்கெதிராக எகிப்பு டிரா செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் உருகுவே 1-0 என வெற்றி பெற்றது.
இந்த தோல்வியை சாலாவால் ஜீரணிக்க முடியவில்லை. பிறந்த நாளை கருத்தில் கொள்ளாமல் சோகமாகவே காட்சியளித்தார். எகிப்து அடுத்த போட்டியில் ரஷியாவை வருகிற செவ்வாய்க்கிழமை எதிர்கொள்கிறது. இதற்காக எகிப்து அணி கிரோஸ்னி சென்றடைந்தது.
அப்போது சாலா ரசிகர்கள் இரண்டு அடுக்குக் கொண்ட 100 கிலோ எடையுள்ள பிறந்தநாள் கேக்கை வைத்து, சாலாவை கட் செய்ய சொன்னார்கள். எகிப்து அணியின் சக வீரர்கள் ஆங்கிலத்திலும், அரேபிக் மொழியிலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற, அவர் கேக்கை வெட்டி தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.
லிவர்பூல் அணிக்காக இந்த சீசனில் முகமது சாலா 44 கோல்கள் அடித்திருந்தார். அதை பாராட்டும் வகையில் கேக்கிற்கு மேல் தங்க நிறத்திலான ஷூ அலங்கரித்தது.

Next Story
×