search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை சேதப்படுத்தியதாக புகார்- பீல்டிங் செய்ய மறுத்த இலங்கை வீரர்கள்
    X

    பந்தை சேதப்படுத்தியதாக புகார்- பீல்டிங் செய்ய மறுத்த இலங்கை வீரர்கள்

    பந்தை சேதப்புடுத்தியதாக புகார் கூறியதால் இலங்கை வீரர்கள் பீல்டிங் செய்ய மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #WIvSL
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐஸ்லேட்டில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 253 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

    3-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன், இலங்கை வீரர்கள் அறைக்குச் சென்ற நடுவர்கள் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக புகார்  கூறினார்கள். அத்துடன் நேற்று பயன்படுத்திய பந்தை இலங்கை வீரர்கள் இன்று பயன்படுத்தக் கூடாது. வேறு பந்தைதான் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்கள்.

    இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் இலங்கை வீரர்கள் களம் இறங்கமாட்டார்கள் என்று திட்டவட்டமாக கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் மற்றும் கள நடுவர்கள் மட்டுமே மைதானத்தில் இருந்தனர்.



    பின்னர் போட்டி நடுவர் இலங்கை கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் பேச்சவார்த்தை நடத்தினார்கள். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    இலங்கை வீரர்கள் பந்தை மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்தனர். அத்துடன் வழக்கை எதிர்கொள்ள தயார் என்றும் கூறினார்கள். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதமாக ஐந்து ரன்கள் கொடுக்கப்பட்டு, பின்னர் ஆட்டம் தொடங்கியது.
    Next Story
    ×