search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்ண்ட் லூசியா டெஸ்ட் - 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 34/1
    X

    செய்ண்ட் லூசியா டெஸ்ட் - 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 34/1

    வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. #WIvSL #SLvWI

    செய்ண்ட் லூசியா:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் சந்திமால் 119 ரன்கள், குசால் மெண்டிஸ் 45 ரன்கள் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் ஷனான் கேப்ரியல் 5 விக்கெட்களும், கெமார் ரோச் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 

    இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 53 ரன்களுடனும், ஹோப் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி பந்துவீச்சில் கசுன் ரஜிதா, லஹிரு குமாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.



    இந்நிலையில், நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஹோப் 19 ரன்னிலும், ஸ்மித் 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். டவ்ரிச் அரைசதம் கடந்தார். சேஸ் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

    அரைசதம் அடித்த டவ்ரிச் 55 ரன்களில் அவுட் ஆனார். இதுதவிர ஜேசன் ஹோல்டர் 15 ரன்களும், கெமார் ரோச் 13 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க தவறினர். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 100.3 ஓவரில் 300 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி பந்துவீச்சில் லஹிரு குமாரா 4 விக்கெட்களும், கசுன் ரஜிதா 3 விக்கெட்களும், சுரங்கா லக்மல் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 47 ரன்கள் முன்னிலை பெற்றது. 

    இதையடுத்து, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசால் பெரேரா, மஹிலா உடவாட்டே ஆகியோர் களமிறங்கினர். பெரேரா 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் கசுன் ரஜிதா களமிறங்கினார். இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.  

    மஹிலா உடவாட்டே 11 ரன்களுடனும், ரஜிதா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். வெஸ்ட்இண்டீஸ் அணியில் ஷனால் கேப்ரியல் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் இன்னும் 13 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. #WIvSL #SLvWI
    Next Story
    ×