search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக் கோப்பை தொடக்கவிழா அன்று காரை பயன்படுத்தாதீர்கள்- மாஸ்கோ அதிகாரிகள் அறிவுறுத்தல்
    X

    உலகக் கோப்பை தொடக்கவிழா அன்று காரை பயன்படுத்தாதீர்கள்- மாஸ்கோ அதிகாரிகள் அறிவுறுத்தல்

    உலகக் கோப்பை தொடடக்க விழா நாளன்று மாஸ்கோ நகரில் பொதுமக்கள் காரை பயன்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். #WorldCup2018
    ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் நாளைமறுநாள் உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது. தொடக்க விழாவிற்காக முக்கிய அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள் மாஸ்கோவில் குவிவார்கள். அப்போது அவர்கள் மைதானத்திற்கு எளிதாக செல்ல வேண்டும்.

    இதனால் சாலைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். விமான நிலையத்திற்கு ரசிகர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இதனால் உள்ளூர்வாசிகள் சொந்த காரை பயன்படுத்த வேண்டும். அதை வீட்டில் விட்டுவிட்டு அரசு வாகனத்தை பயன்படுத்துங்கள் என்று மாஸ்கோ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.



    மேலும், பல முக்கிய சாலைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. மாஸ்கோவில் முன்னணி தலைவர்கள் வந்தால் மட்டுமே சாலை போக்குவரத்த்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். தற்போது உலகக்கோப்பை தொடக்க விழாவால் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
    Next Story
    ×