search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 வருடத்திற்கு முன்பைவிட தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளேன்- முச்சதம் வீரர் சொல்கிறார்
    X

    2 வருடத்திற்கு முன்பைவிட தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளேன்- முச்சதம் வீரர் சொல்கிறார்

    இங்கிலாந்துக்கு எதிராக முச்சதம் அடித்த கருண் நாயர், தற்போது முன்னேற்றம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். #INDvAFG
    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர். 26 வயதாகும் இவர் 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மொகாலி டெஸ்டில் அறிமுகமானார். மொகாலி டெஸ்டில் நான்கு ரன்களும், அதன்பின் நடைபெற்ற மும்பை டெஸ்டில் 13 ரன்களும் அடித்தார். சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-வது டெஸ்டிலேயே முச்சதம் அடித்து அசத்தினார். அத்துடன் 303 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் சேவாக்குடன் முச்சதம் அடித்த வீரர் பட்டியலில் இடம்பிடித்தார்.

    அதன்பின் ஆஸ்திரேலியா தொடரின்போது பெங்களூரு டெஸ்டில் 26 ரன்களும், ராஞ்சி டெஸ்டில் 23 ரன்களும், தரம்சாலா டெஸ்டில் 5 ரன்களும் மட்டுமே எடுத்தார். இதனால் இந்திய அணியில் தொடர்ந்து இடம் கிடைக்கவில்லை.

    இந்தியா வருகிற 14-ந்தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால், கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வாய்ப்பு கெட்டியாக பிடித்துக் கொள்ள வீரும்பும் அவர், இரண்டு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன் என்ற தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கருண் நாயர் கூறுகையில் ‘‘நான் தற்போது பிட்டராகியுள்ளேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அணியில் இடம்பெறவில்லை. இந்த நேரத்தில் அதிக சிரமம் எடுத்து என்னுடைய திறமையை வளர்த்துள்ளேன். பேட்டிங் மற்றும் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தினேன். உள்ளூர் தொடர்களில் அதிக ரன்கள் குவித்துள்ளேன். இரண்டு வருடத்திற்கு முன் நான் இருந்ததை விட தற்போது நான் முன்னேற்றம் அடைந்துள்ளேன்’’ என்றார்.
    Next Story
    ×