என் மலர்

  செய்திகள்

  3 மாடி வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றிய கொல்கத்தா டீக்கடை உரிமையாளர்
  X

  3 மாடி வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றிய கொல்கத்தா டீக்கடை உரிமையாளர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெஸ்சியின் தீவிர ரசிகரான கொல்கத்தாவைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் தனது வீட்டிற்கு அர்ஜென்டினா அணியின் கலரை அடித்துள்ளார். #WorldCup2018
  கால்பந்து விளையாட்டில் தற்போதைய தலைமுறையில் சிறந்த வீரர்களாக போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் ஆகியோர் கருதப்படுகிறார்கள். இதில் மெஸ்சிக்கும், ரொனால்டோவிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

  இருவருக்கும் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். வரும் வியாழக்கிழமை ரஷியாவில் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த தொடரை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டிற்குத்தான் அதிக முக்கியத்தும் இருந்தாலும், கால்பந்து போட்டிக்கும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

  தற்போதைய நிலையில் கொல்கத்தாவில் (இந்தியா) கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் மெஸ்சியின் தீவிர ரசிகர். ரஷியா செல்ல வசதியில்லாதால், அர்ஜென்டினா அணியின் ஜெர்சி வண்ணத்தை வீடு முழுவதும் அடித்து போட்டியை வரவேற்க உள்ளார்.

  கொல்கத்தாவில் டீக்கடை வைத்திருப்பவர் ஷிப் ஷங்கர் பத்ரா. கொல்கத்தாவின் ஆயிரக்கணக்காக அர்ஜென்டினா ரசிகர்களில் இவரும் ஒருவர். இவர் கொஞ்சம் வித்தியாசமானவர்.

  இவருடைய ஆசையெல்லாம் ரஷியா சென்று அர்ஜென்டினா போட்டியை நேராக பார்க்க வேண்டும் என்பதுதான். இதற்காக அவர் 60 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். ஆனால் டிராவல் ஏஜென்ட் ரஷியா சென்று போட்டியை பார்க்க ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறியதால் இவரது கனவு வீணானது.

  நேரில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், சற்றென்று அவருக்கு ஒரு ஐடியா வந்தது. அதன்படி தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா வீரர்கள் அணியும் ஜெர்சியின் கலரை வண்ணமாக பூசி, தன்னுடைய வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றிவிடடார்.  நவாப் கஞ்ச் வடக்கு 24 பர்கனாஸ் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் பத்ரா கூறுகையில் ‘‘நான் புகை பிடிக்க மாட்டேன். அதேபோல் போதை பழக்கமும் கிடையாது. நான் அர்ஜென்டினா அணி மற்றும் மெஸ்சியின் விளையாட்டிற்கு மட்டுமே அடிமை. நான் அதிக அளவில் சம்பாதிக்க வில்லை. ஆனால் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும்போது, இதற்காக ஓரளவிற்கு பணம் தனியாக சேர்த்து வைப்பேன்.

  எனக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவர்கள் மெஸ்சியின் ஒரு போட்டியை கூட விடுவதில்லை. தேர்வுக் காலத்தின்போது நள்ளிரவில் போட்டி நடந்தால் கூட, தூங்குவதுபோல் நடித்து, செல்போனில் போட்டியை பார்ப்பார்கள்’’ என்றார்.
  Next Story
  ×