search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இப்படி தினமும் நடந்தால் உயிரையும் கொடுப்போம் - சுனில் செத்ரி நெகிழ்ச்சி
    X

    இப்படி தினமும் நடந்தால் உயிரையும் கொடுப்போம் - சுனில் செத்ரி நெகிழ்ச்சி

    மும்பையில் நேற்று நடைபெற்ற கென்யா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு கேப்டன் சுனில் செத்ரி நன்றி தெரிவித்துள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    மும்பை: 

    மும்பையில் நடைபெற்று வரும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் நேற்று மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

    இப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் 100வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய சுனில் செத்ரி இரண்டு கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர். 

    இந்த போட்டிக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு இந்திய அணியின் 
    கேப்டன் சுனில் செத்ரி நன்றி தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து டுவிட்டரில் சுனில் செத்ரி கூறியிருப்பதாவது:-

    இன்றைய போட்டியில் கிடைத்த ஆதரவு நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் கிடைத்தால், மைதானத்தில் எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்தியா, இந்த இரவு சிறப்பானது, ஏனெனில் நாம் இன்று ஒன்றாக இருந்தோம். மைதானத்திற்கு வந்து ஆரவாரம் செய்தும், வீட்டில் இருந்தும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup 
    Next Story
    ×