என் மலர்

  செய்திகள்

  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், தெய்ம், ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்
  X

  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், தெய்ம், ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நோவாக் ஜொகோவிச், டோமினிக் தெய்ம், அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். #NovakDjokovic #AlexanderZverev #DominicThiem #FrenchOpen2018

  பாரிஸ்:

  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்சின் பாரிஸ் நகரில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

  ஒரு ஆட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் பெர்னாண்டஸ் வெர்டஸ்கோ ஆகியோர் மோதினர். இதில் அதிரடியாக விளையாடிய ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

  மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தெய்ம், ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டார். இப்போட்டியில், தெய்ம் 6-2, 6-0, 5-7, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.  மற்றொரு போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் - ரஷியாவின் கரன் கச்சனோவ் ஆகியோர் மோதினர். இதில், ஸ்வரேவ் 4-6, 7-6, 2-6, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். 

  இதன்மூலம் நோவாக் ஜொகோவிச், டோமினிக் தெய்ம், அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். #NovakDjokovic #AlexanderZverev #DominicThiem #FrenchOpen2018
  Next Story
  ×