search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வார்னர், ஸ்மித்திற்கு கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை- ஷேன் வாட்சன்
    X

    வார்னர், ஸ்மித்திற்கு கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை- ஷேன் வாட்சன்

    பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் வார்னர், ஸ்மித்திற்கு கொடுக்கப்பட்டது அதிகபட்ச தண்டனை என ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2018 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு ஷேன் வாட்சன் அதிரடி முக்கிய காரணமாக அமைந்தது. அவர் சதமடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

    ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்பு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டின்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இந்த விவகாரத்தில் இவருக்கு 9 மாதம் தடைவிதிக்கப்பட்டது. அத்துடன் இதற்கு துணையாக இருந்த கேப்டன் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதிக்கப்பட்டது.



    மூன்று பேரின் தண்டனை மிகவும் அதிகபட்சமானது என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறுகையில் ‘‘தடையை ஒப்பிடும்போது அவர்கள் மீதான் தண்டனை மிகவும் அதிகபட்சமானது. கடந்த காலங்களில் இதுபோன்று நடைபெற்ற தவறுகளுக்கு இப்படி தண்டனை கொடுக்கப்படவில்லை.

    மூன்று பேரும் அதிப்படியான விலையை கொடுத்துள்ளனர். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மீண்டும் அணிக்கு திரும்பும்போது, மக்களின் நல்ல பெயர் எடுக்க எல்லாவகை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்’’ என்றார்.
    Next Story
    ×