என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2018 சீசனில் 500 ரன்னைத் தாண்டி ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றிய ரிஷப் பந்த்
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பந்த் அதிரடி ஆட்டம் மூலம் 521 ரன்களுடன் ஆரஞ்ச் தொப்பியை கைப்பற்றியுள்ளார். #IPL2018 #DD
ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வீரர் ரிஷப் பந்த் ஆட்டம் அதிரடியாக இருந்தது. 63 பந்தில் 128 ரன் குவித்தார். இதில் 15 பவுண்டரி, 7 சிக்சர் அடங்கும். நடப்பு தொடரில் 500 ரன்னை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை ரிஷப் பந்த் பெற்றார். அவர் 11 ஆட்டத்தில் 521 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஒரு சதம், 3 அரை சதம் அடித்துள்ளார். சராசரி 52.10 ஆகும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் 493 ரன்கள் (11 ஆட்டம்) எடுத்து 2-வது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுல் 471 ரன்கள் (10 ஆட்டம்) எடுத்து 3-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 435 ரன்கள் எடுத்து 4-வது இடத்திலும், சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு 423 ரன்னுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

Next Story