என் மலர்

  செய்திகள்

  சேஸிங்கில் அசத்தும் தினேஷ் கார்த்திக்- 5 போட்டியில் நான்கில் முத்திரை பதித்துள்ளார்
  X

  சேஸிங்கில் அசத்தும் தினேஷ் கார்த்திக்- 5 போட்டியில் நான்கில் முத்திரை பதித்துள்ளார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் சேஸிங்கில் களம் இறங்கி 5-ல் நான்கு போட்டியை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். #IPL2018 #KKRvCSK
  ஐபிஎல் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார்.

  இவரது தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது இதன்மூலம் 9 போட்டிகள் முடிவில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது. நான்கில் தோல்வியடைந்துள்ளது.

  9 போட்டியில் 5 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2-வது பேட்டிங் செய்துள்ளது. இதில் நான்கு முறை வெற்றி வாகை சூடியுள்ளது. ஒருமுறைதான் தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வியடைந்த போட்டியில் மட்டும்தான் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 18 ரன்கள் அடித்துள்ளார்.  மற்ற நான்கு போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 35 (29 பந்து), 42 (23 பந்து), 12 (10 பந்து), 45 (18 பந்து ) அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதில் மூன்று முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். ஒரு போட்டியில் கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் ஆட்டமிழந்தார்.
  Next Story
  ×