என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் 2018- நன்னடத்தை விதியை மீறி கண்டனத்திற்குள்ளான ஷிவம் மவி, அவேஷ் கான்
  X

  ஐபிஎல் 2018- நன்னடத்தை விதியை மீறி கண்டனத்திற்குள்ளான ஷிவம் மவி, அவேஷ் கான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நன்னடத்தை விதிமுறையை மீறிய இளம் வீரர்களான ஷிவம் மவி, அவேஷ் கான் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளனர். #IPL2018 #DDvKKR
  டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

  டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 40 பந்தில் 93 ரன்கள் விளாசி டெல்லி அணி 219 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். ஷிவம் மவி கடைசி ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் அவர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து மோதலில் ஈடுபட்டார்.  இதேபோல் டெல்லி பந்து வீசும்போது அந்த அணியின் அவேஷ் கானும் மோதல் போக்கில் ஈடுபட்டார். இதுகுறித்து நடுவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ஐபிஎல் வீரர்கள் நன்னடத்தை விதியை மீறியதாக நடுவர்கள் குற்றம்சாட்டினர். இதை இருவரும் ஒத்துக்கொண்டதாலும், இந்த குற்றம் லெவல் 1-க்குள் வருவதாலும் நடுவர்கள் கண்டனத்துடன் எச்சரித்து அனுப்பினர்.

  இந்த ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது வெற்றியை பெற்றுள்ளது.
  Next Story
  ×