என் மலர்

  செய்திகள்

  ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - காசியப், சமீர் வர்மா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
  X

  ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் - காசியப், சமீர் வர்மா காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரான்சில் நடைபெற்று வரும் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் பாருபள்ளி காசியப், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். #OrleansMastersSuper100 #ParupalliKashyap #SameerVerma
  பாரிஸ்:

  ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பாருபள்ளி காசியப், அயர்லாந்தின் ஜோஷுவா மேகீ உடன் மோதினார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய காஷ்யப் முதல் செட்டை 21-11 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காஷ்யப் இரண்டாவது செட்டையும் 21-14 என கைப்பற்றினார்.  இதன்மூலம் 21-11, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற காஷ்யப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் இன்று நடைபெற உள்ள காலிறுதி சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கின் ஈடு ஹெய்னோவை எதிர்கொள்ள இருக்கிறார்.

  மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மா, மூன்றாவது சுற்று ஆட்டத்தில் பிரான்சின் தாமஸ் ரோக்செல்லை 21-16, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். #OrleansMastersSuper100 #ParupalliKashyap #SameerVerma
  Next Story
  ×