என் மலர்

  செய்திகள்

  தென்ஆப்பிரிக்கா மண்ணில் வார்னர் தொடர்ச்சியாக 6 அரைசதம் அடித்து சாதனை
  X

  தென்ஆப்பிரிக்கா மண்ணில் வார்னர் தொடர்ச்சியாக 6 அரைசதம் அடித்து சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடர்ச்சியாக 6 இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து டேவிட் வார்னர் சாதனைப் படைத்துள்ளார். #SAvAUS #Warner
  தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க பேட்ஸ்மேன் வார்னர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 72 பந்தில் அரைசதம் அடித்த வார்னர் 79 பந்தில் 51 ரன்கள் எடுத்து பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

  இந்த இன்னிங்சில் அரைசதம் அடித்ததன்மூலம் தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்கா மண்ணில் 6 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  இதற்கு முன் கல்லீஸ் 2002-ம் ஆண்டு ஐந்து முறை தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அதேபோல் டபிள்யூ ஹமண்ட் 1930-31-ம் ஆண்டில் 5 முறை அரைசதம் அடித்துள்ளார்.
  Next Story
  ×