என் மலர்
செய்திகள்

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் - இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க் வீரரை வென்று இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பேசல்:

சுவிட்சர்லாந்தில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் உலகின் நம்பர் 2 இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஜார்ஜென்சனும், இந்திய வீரர் சமீர் வர்மாவும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர் சமீர் வர்மா சிறப்பாக ஆடினார். இதனால் அவர் முதல் செட்டை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதையடுத்து, இரண்டாவது சுற்றை கைப்பற்ற வேண்டும் என ஜார்ஜென்சன் கடுமையாக போராடினார். ஆனாலும், அவரது ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீர் வர்மா அற்புதமாக விளையாடி 21-13 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். சமீர் வர்மா சுமார் 36 நிமிடத்தில் இந்த வெற்றியை பதிவு செய்தார்.
இறுதியில், டென்மார்க் வீரர் ஜார்ஜென்சனை இந்திய வீரர் சமீர் வர்மா 21-15, 21-13 என்ற் நேர் செட்களில் வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
இதுதொடர்பாக சமீர் வர்மா கூறுகையில், சுவிஸ் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறுவேன் என நினைத்திருந்தேன். ஆனால், இவ்வளவு எளிதில் வெற்றி பெறுவேன் என நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Next Story