என் மலர்

  செய்திகள்

  ஆஸ்திரேலியா ஓபனை வென்ற வோஸ்னியாக்கி முதல் இடத்தை பிடித்தார்: பெடரர் அதே இடம்
  X

  ஆஸ்திரேலியா ஓபனை வென்ற வோஸ்னியாக்கி முதல் இடத்தை பிடித்தார்: பெடரர் அதே இடம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வோஸ்னியாக்கி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பெடரர் 2-வது இடத்திலேயே நீடிக்கிறார். #AUSOpen #Federer #wozniachi
  2018-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

  நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஹாலெப்-ஐ வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 2-வது இடத்தில் இருந்த வோஸ்னியாக்கி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நம்பர் ஒன் இடத்தை வகித்திருந்தார். அதன்பின் தற்போதுதான் முதல் இடத்தை பிடித்தள்ளார். முதல் இடத்தில் இருந்த ஹாலெப் 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.  ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை வீழ்த்தி 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். சாம்பியன் பட்டம் வென்றாலும் பெடரர் தொடர்ந்து 2-வது இடத்திலேயே நீடிக்கிறார். நடால் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். ஆனால் இருவருக்கும் இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 155 ஆக குறைந்துள்ளது.
  ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்த மரின் சிலிச் 6 இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டென்னிஸ் தரவரிசையில் சிலிச்சின் சிறந்த தரவரிசை இதுவாகும். அரையிறுதியில் ரோஜர் பெடரரிடம் தோல்வியடைந்த கொரிய வீரர் சங் 29 இடங்கள் முன்னேறி முதன்முறையாக 50 இடத்திற்குள் வந்துள்ளார். அவர் 29-வது இடத்தில் உள்ளார். தொடக்கத்திலேயே வெளியேறிய வாவ்ரிங்கா 15-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். #ausopen #TennisATPRankings
  Next Story
  ×