search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    40 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய மகளிர் கல்லூரி விளையாட்டு: சென்னையில் நாளை தொடக்கம்
    X

    40 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய மகளிர் கல்லூரி விளையாட்டு: சென்னையில் நாளை தொடக்கம்

    எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் 40 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய மகளிர் கல்லூரி விளையாட்டு போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.
    சென்னை:

    எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் கல்லூரிகள் இடையே அகில இந்திய அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 13-வது ‘வாஸ்போ’ மகளிர் கல்லூரி விளையாட்டுப் போட்டி சென்னையில் நாளை (29-ந்தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 1-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்கிறது.

    இதில் கிறிஸ்ட் பல்கலைக்கழகம், மவுண்ட் கார்மெல், என்.எம்.ஆர்.கே.வி. (பெங்களூர்), செயின்ட் பிரான்சிஸ் (ஐதராபாத்), எத்திராஜ், இந்துஸ்தான், பனிமலர், செயின்ட் ஜோசப்ஸ், எம்.ஓ.பி உள்பட 40 கல்லூரிகள் பங்கேற்கின்றன. 1000 வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    கைப்பந்து, கூடைப்பந்து, எறிப்பந்து, கால்பந்து, பால்பேட்மின்டன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், செஸ் ஆகிய விளையாட்டுகள் நடக்கிறது. ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சுழற்கோப்பை கோப்பை வழங்கப்படும்.

    நாளை மாலை 5.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் முன்னாள் டென்னிஸ் வீரர் ரமேஷ் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகவும், கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×